2020 ஆம் ஆண்டு பருவ ஐ.பி.எல். தொடர் திகதி அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டு பருவ காலத்திற்கான ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகள் இடம்பெற்றுள்ள இந்தத் தொடரில், இறுதியாக கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.

இவ்வருடத்திற்கான (2020) போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்ச் 29 ஆம் திகதி தொடர் தொடங்கும் எனவும், முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் எனவும், இதில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றொரு அணியுடன் விளையாடும் எனவும் முக்கிய நபர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை அவ்வாறு தொடங்கினால் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் தொடக்கத்தில் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது.

அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘ருவென்டி 20’ தொடரின் கடைசி போட்டி மார்ச் 29 ஆம் திகதி முடிவடைகிறது. இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது.

முன்னதாக ஐபிஎல் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏப்ரல் முதலாம் திகதி தொடரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முகநூலில் நாம்