
ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை என்பது மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும்
நிலையான வளர்ச்சிக்கான ஊக்குவிப்புகளுடன் கூடிய முன்னுரிமை வர்த்தக
சலுகையாகும். எனவே இலங்கை அரசாங்கம் இந்த சலுகையை பெற்றுக்கொள்ள
வேண்டுமாயின் இந்த விடயங்களில் தனது உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும்
என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பணிப்பாளர்
2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகையை இலங்கை மீண்டும்
பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தபோது சர்வதேச தரத்துக்கேற்ப பயங்கரவாத
எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவருவதற்கு உறுதியளித்தது. அதாவது பயங்கரவாத
தடைச்சட்டத்தை கணிசமான அளவில் திருத்துவதற்கு அல்லது அதை இரத்து செய்து,
அதற்கு பதிலாக பொருத்தமான ஒரு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான
உறுதிமொழியாகவே அமைந்தது. இதற்கான இலங்கையின் அர்ப்பணிப்புக்கு நன்றியும்
தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அர்ப்பணிப்பு இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இலங்கையின்
பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகை தற்போது
மீண்டும் மீளாய்வுக்கு வந்துள்ளது.
எனவே, இலங்கை அரசாங்கமானது அதன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற
துறைகளில் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாய
தருணமாகவே இன்றைய காலகட்டம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.