20, 20 தரவரிசை – 1 இடத்தை பிடித்த புதிய துடுப்பட்டவிரர் 

பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனில் நடைபெற்றுள்ளன.

ஒருநாள் தொடர் மென்செஸ்டரில் நடைபெறவுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. 2 வது டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

3 வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. பிறகு விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனினும் டி20 தொடரை 2 – 1 என இங்கிலாந்து வென்றுள்ளது.

இந்த டி20 தொடரில் 66, 42, 21 ஓட்டங்கள் என இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் சிறப்பாக விளையாடினார். இதுவரை விளையாடிய 16 டி20 ஆட்டங்களில் 682 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி – 48.71, ஸ்டிரைக் ரேட் – 146.66. இதை அடுத்து 877 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 869 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். ஃபிஞ்ச் 3 ஆம் இடத்திலும் இந்தியாவின் ராகுல் 4 ஆம் இடத்திலும் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்