20.05.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாகச் சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும். இன்று அம்பிகையை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

ரிஷபராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நன்றாக ஒத்துழைப்பார்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கப் பெறலாம்.

மிதுனராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தேவைக்குப் புதிய ஆடைகள் வாங்குவீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். சிவபெருமானை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

கடகராசி அன்பர்களே!

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடக்கும். சக வியாபாரிகளால் ஆதாயம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி சிறிது சங்கடத்தைத் தரக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். இன்று துர்கையை வழிபட காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிட முடியும்.

கன்னிராசி அன்பர்களே!

தந்தைவழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். வாடிக்கையாளர் களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.

துலாராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபட மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகராசி அன்பர்களே!

தெய்வ அனுகிரகம் நிறைந்த நாள். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

தனுசுராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். இன்று விநாயகரை வழிபடுவதால் நற்பலன்கள் கூடுதலாகும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. மாலையில் நண்பர்கள் மூலம் கேட்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்தும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாடு நன்று.

கும்பராசி அன்பர்களே!

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காகச் செலவு செய்யவேண்டிவரும். சிலருக்கு புதிய ஆடை, வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நலம் சேர்க்கும்.

முகநூலில் நாம்