20 வது திருத்தத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளிற்கு ஜனாதிபதி ஆதரவளிக்கவேண்டும்- ஓமல்பே தேரர்

நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த அனைத்து தனிநபர்களிற்கும் எதிராக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ள அவர் இவ்வாறான நடவடிக்கைகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஜனாதிபதிக்கு அங்கீகாரத்தை கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோதிடர்கள் உறவினர்கள் ஊழல்வாதிகள் சுயநலம் மிக்க தனிநபர்களிடமிருந்து மாத்திரம்  ஆலோசனைகளை பெற்றார் என குறிப்பிட்டுள்ள ஓமல்பேதேரர்  ஜனாதிபதி நிபுணர்கள் புத்திஜீவிகளை செவிமடுக்கதவறிவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தவறான நடவடிக்கைகளை ஜனாதிபதி திருத்திக்கொள்ளவேண்டும்,20வது திருத்த்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை குறைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி ஆதரவளிக்கவேண்டும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்