
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்க் நகரின் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் இருந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு சிறப்பு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
‘ஓக்’ மரத்திலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் இருந்து புறப்பட்ட ராணி எலிசபெத்தின் உடல், எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
வழியெங்கும் வரிசையில் கூடிநின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காரில் வைக்கப்பட்டிருந்த மகாராணியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.