2ஆம் இடத்துக்கு முன்னேறினார் வக்னர்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர் முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, இன்று வெளியிடப்பட்ட தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை நீல் வக்னர் அடைந்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் வேர்ணன் பிலாந்தர், எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. நீல் வக்னர், 3. ககிஸோ றபாடா, 4. ஜேஸன் ஹோல்டர், 5. வேர்ணன் பிலாந்தர், 6. ஜஸ்பிரிட் பும்ரா, 7. மிற்செல் ஸ்டார்க், 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. இரவிச்சந்திரன் அஷ்வின், 10. மொஹமட் ஷமி.

இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 82 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் மர்னுஸ் லபுஷைன், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி டெஸ்டில் 79 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் டேவிட் வோணர், எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை அஜின்கியா ரஹானேயுடன் பகர்ந்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 129 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக், 18ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராட் கோலி, 2. ஸ்டீவ் ஸ்மித், 3. கேன் வில்லியம்சன், 4. மர்னுஸ் லபுஷைன், 5. செட்டேஸ்வர் புஜாரா, 6. பாபர் அஸாம், 7. டேவிட் வோணர், அஜின்கியா ரஹானே, 9. ஜோ றூட், 10. குயின்டன் டி கொக்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவீந்திர ஜடேஜா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. வேர்ணன் பிலாந்தர், 5. இரவிச்சந்திரன் அஷ்வின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்