19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல்,20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்ச நாளை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவுள்ள நிலையில் ஜூலை 15 ஆம் திகதி பாராளுமன்றம் கூடி ஜனாதிபதி பதவி வெறிதாக்க்கப்பட்டதை அறிவிக்கவுள்ளது.

தொடர்ந்து ஜூலை 19 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் என பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டம் 1981 சிறப்பு விதிகளின் படி ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பார். தொடர்ந்து அரசியலமைப்பு விதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு புதிய ஜனாதிபதி வழி வகுப்பார்.

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்