கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் சர்வதேச பொறியியல் மாநாடு

யாழ். பல்கலைகழகத்தின் முதலாவது பொறியியல் மாநாடு, கிளிநொச்சி அறிவியல்நகர் பொறியியல் பீட வளாகத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு தங்களது ஆய்வுகளை சமர்பிக்கவுள்ளனர். இத்தகவலை பொறியியல் பீட பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்

இதன் மூலம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களிருந்து வருகின்றவர்கள் மற்றும் மாணவர்கள் பயனை பெறக் கூடியதாக இருக்கும். அதாவது தங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை பகிர்ந்துகொள்ள கூடிய ஒரு களமாக இந்த மாநாடு அமையவுள்ளது. இதன் மூலம் இலங்கை மற்றும் சர்தேச அபிவிருத்திகளை ஒரு நிலைபேறான அபிவிருத்தியாக கொண்டுச் செல்லக் கூடியதாக இருக்கும்

இந்த பொரறியியல் மாநாடு பல தொழிற்சாலைகள் , நிறுவனங்களின் ஆதரவோடு இடம்பெறுகிறது. யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடத்தின் ஆராச்சியாளர்களும் மற்றும் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, கனடா, சீனா, கொங்கொங் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வருகின்ற ஆய்வாளர்களும் இதில் பங்குபற்றுகின்றார்கள்.

இந்த பொறியியல் ஆய்வு மாநாடு பல சமூக பிரச்சினைகளை  பொறியியல் நோக்கோடு ஆய்வு செய்து   அவற்றிக்கு தீர்வுகளை காணவுள்ளது. இதன் போது தெரிவு செய்யப்படுகின்ற சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்கப்படவுள்ளது. இதற்காக பல முன்னணி பல்கலைகழகங்கள், பேராசிரியர்கள் ஆகியோர் உதவி
செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்