18.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் பணவரவும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவல கத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும்.

மிதுனராசி அன்பர்களே!

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். வீட்டில் பொறுப்புகள் அதிகரித்தாலும் உறவினர்களின் உதவியுடன் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கடகராசி அன்பர்களே!

மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். சிலருக்குப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்டநாள்களாக நிறைவேற்றவேண்டும் என்று நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். தந்தை வழியில் சில செலவுகள் ஏற்படும். பிள்ளை தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

துலாராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களால் செலவுகளும் ஏற்படும்.

விருச்சிகராசி அன்பர்களே!

மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.. வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

தனுசுராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்குக் கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை நிர்வாகத்தினரால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

கும்பராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகள் கண்டிப்பாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மீனராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் பேசுவதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும்.

முகநூலில் நாம்