16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படலாம்

மேற்கு, வட மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதி வெப்பமான வானிலை நிலவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை நிலவும் வெப்பமான காலநிலையில் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த நாட்களில் வடக்கு மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்