
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் 150 ஓட்டங்களை கடந்துள்ளார்.
ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் தினேஷ் சந்திமால் தற்போது 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்குகின்றது.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 498 ஓட்டங்கள் எடுத்து தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.