15 வயது மாணவன் சனஹாஸ் ரணசிங்க உயர் தரத்தில் சித்தி!

15 வயது மாணவனான சனஹாஸ் ரணசிங்க தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளில் மூன்று B சித்திகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். 

கடவத்தை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் தற்போது தரம் 9 இல் கல்வி கற்கும் தெவும் சனஹாஸ் ரணசிங்க என்ற இந்த மாணவன், 2007 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 173 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த சனஹாஸ், 2020 ஆம் ஆண்டு தனது 13 ஆவது வயதில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி  6 ஏ, 2 பீ, 1 சீ பெறுபேற்றைப் பெற்று சித்தி அடைந்திருந்தார்.  

இவ்வாறான நிலையில் கடந்த 2021 ஆண்டு வர்த்தகப் பிரிவில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றியிருந்த சனஹாஸ்,  பொருளியல், வணிகவியல், கணக்கீடு ஆகிய மூன்று பாடங்களிலும் சீ  பெறுபேற்‍றை சித்தியடைந்தார்.

கிரிக்கெட் மீது அதிக மோகம் கொண்ட சனஹாஸ், சட்டத்துறையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் எதிர்காலத்தில்  வழக்கறிஞராகவும் கிரிக்கெட் வீரராகவும், வரவேண்டும் என்பதை தனது இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் சனஹாஸ் மூத்தவர் என்பதுடன், அவர் கல்வி பயிலும் பாடசாலையிலேயே அவரது பெற்றொரும்  ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

சனஹாஸை அரச பல்கலைக்கழகம் அல்லது தனியார் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அனுமதிப்பது தொடர்பில் அவரது தாயான மல்கா ரணசிங்க ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்