இந்த வார இறுதியில் மேலும் ஒரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு

இந்த வார இறுதியில் மேலும் 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளது என லிட்ரோ தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இவற்றில் 60 சதவீதமானவை அதாவது சுமார் 30 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நேரத்தில் கப்பல் வராத காரணத்தினால் கடந்த செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் இடைநிறுத்தியிருந்தது.