14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் சோதனை! விரும்பினால் இலங்கைக்குள் நுழையலாம்

உலகையே முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து இலங்கையிலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.இந் நிலையில் இலங்கைக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது.

அந்தவகையில் குறிப்பாக தனிமைப்படுத்தல் சோதனையில் சுமார் 2 ஆயிரம் வெளிநாட்டவர்களை தங்கவைத்திருப்பதுடன், சோதனைக்குட்படாதவர்களை தேடி கண்டுபிடித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர்கள் சிலர் தனிமைப்படுத்தல் சோதனைக்கு மறுக்கும் நிலையில், இன்றைய தினம் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களிடம் விமானப்படையினர் ஒரு விடயத்தை மட்டுமே கூறியிருக்கின்றனர்.அதாவது இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

முகநூலில் நாம்