132ஆவது ஸ்ரீலங்கா ஆமெச்சூர் கோல்வ் போட்டியில் நிரேக் தெஜ்வானியும் தானியா பாலசூரியவும் சம்பியனாகினர்

றோயல் கலம்போ கோல்வ் கிளப் ஏற்பாடு செய்திருந்த 132ஆவது ஸ்ரீலங்கா ஆமெச்சூர்  கோல்வ்   போட்டியில் நிரேக் தெஜ்வானியும் ஸ்ரீலங்கா சீமாட்டிகள் ஆமெச்சூர் பகிரங்க கோல்வ் போட்டியில் தானியா பாலசூரியவும் சம்பியனாகினர்.

132ஆவது ஸ்ரீலங்கா ஆமெச்சூர்  கோல்வ்  போட்டியில் ஆரம்ப சுற்றுகளைத் தொடர்ந்து இறுதிச் சுற்றில் 32 கோல்வ் வீரர்கள் பங்குபற்றினர்.

அவர்களில் நிரேக் தெஜ்வானியும் எம். யூ. சானக்க பெரேராவும் 36 குழிகளுக்கான இறுதிப் போட்டியில் விளையாடினர். இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியதுடன் இறுதியில் 2 குழிகள் கூடுதலாக போட்ட (2up) நிரேக் தெஜ்வானி, நடப்பு சம்பியன் சானக்க பெரெராவை வெற்றிகொண்டு சம்பியன் பட்டதை சூடிக்கொண்டார்.

ஸ்கொட்லாந்தில் அண்மையில் நடைபெற்ற கனிஷ்ட பகிரங்க கோல்வ் போட்டியில் பங்குபற்றி நாடு திரும்பிய சூட்டோடு நிரேக் தெஜ்வானி இந்த போட்டியில் பங்குபற்றியிருந்தார். 17 வயதான நிரேக், தனது வயதையும் மீறிய ஆற்றலை வெளிப்படுத்தி மிகக் குறைந்த வயதில் சம்பியனானார்.

றோயல் கலம்போ கோல்வ் கிளப்பை பிரதிநிதித்துவப்படுத்தி குறைந்த வயதில் கோல்வ் விற்பன்னர் பின் பெர்னாண்டோ சம்பியனாகி 53 வருடங்களின் பின்னர் மிகக் குறைந்த வயதில் நிரேக் சம்பியனானது விசேட அம்சமாகும்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சீமாட்டிகள் பகிரங்க கோல்வ் போட்டியில் தானியா பாலசூரிய சம்பியனானார்.

இலங்கையில் மகளிர் கோல்வ் வரலாற்றில் முதல் தடவையாக சகோதரிகளுக்கு இடையில் நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் தனது இளைய சகோதரி ஷெரின் பாலசூரியவை கடைசிக் கட்டத்தில் தானியா வெற்றிகொண்டு சம்பியனானார்.

றோயல் கலம்போ கோல்வ் கழக அதிகாரிகள், உதவித் தலைவர் ரனில் பீரிஸ், சீமாட்டிகள் தலைவி அனூக் சிட்டி ஆகியோர் கஸ்தூரிரட்ன, பிரிகேடியர் (ஓய்வுநிலை) நந்த ஹத்துருசிங்க ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த சுற்றுப் போட்டியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அத்துடன் சமிந்த சிதம்பரம், மஞ்சுள லெனேரொல் – கலம்போ லினன் மேர்ச்சன்ட்ஸ், ரதிஸ் காந்த் – தேவி ஜுவலர்ஸ் ஆகியோருக்கு ஸ்ரீலங்கா கோல்வ் தலைவர் மிச்செல் மகல பெரேரா தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இவ் வருட கோல்வ் போட்டியில் இந்திய கோல்வ் வீரர்கள் சிலர் உட்பட 100 போட்டியாளர்கள் பங்குபற்றனர்.

விசேட பரிசுகள் 

ஸ்ரீலங்கா சீமாட்டிகள் ஆமெச்சூர் பிரிவு

முதல் சுற்றில் மிகச் சிறந்த நகர்வுகளுக்கான லெனார்ட் பீரிஸ் கிண்ணம்:  தானியா பாலசூரிய (73 நகர்வுள்)

முதல் சுற்றில் நிகர புள்ளிகளுக்கான பயர்ஸ்டோன் / ஜெப்சன் கிண்ணம்: ஷயனிக்கா பெர்னாண்டோ (72)

2 சுற்றுகளில் சிறந்த மொத்த நகர்வுகளுக்கான லைலாமணி வீரரட்ன கிண்ணம்: தானியா பாலசூரிய.

சிரேஷ்ட பிரிவு 2 சுற்றுகளுக்கான மொத்த நகர்வுகள் மற்றும் நிகர புள்ளிகள்  – சுமித்ரா உக்வத்த  (2 விருதுகள்).

எவ். பி. டி மெல் சவால் கிண்ணம்

1ஆம் இடம்: தனுஷி வனசிங்க.

2ஆம் இடம்: சுமித்ரா உக்வத்த.

2 சுற்றுகளில் சிறந்த நிகர புள்ளிகளுக்கான பின் பெர்னாண்டோ கிண்ணம்

1ஆம் இடம்: தெவின்கா கனக் ஈஸ்வரன்.

2ஆம் இடம்: தானியா பாலசூரிய.

ஆண்கள் – 132ஆவது ஆமெச்சூர் கோல்வ் வல்லவர் போட்டி

2ஆம் சுற்றில் தனிநபர் சிறந்த மொத்த புள்ளிகளுக்கான பின் பெர்னாண்டோ கிண்ணம்:

1ஆம் இடம்: அம்ரித் டி சொய்சா.

2ஆம் இடம்: என். அமரபத்மா.

முதல் சுற்றில் தனிநபர் சிறந்த நிகர புள்ளிகளுக்கான இலங்கக்கோன் கிண்ணம்

1ஆம் இடம்: ஜெய பிரகாஷ்

2ஆம் இடம்: சாலித்த புஷ்பிக்க

முதல் சுற்றில் தனிநபர் சிறந்த மொத்த புள்ளிகளுக்கான விக்டோரிய கிண்ணம்

1ஆம் இடம்: சாலித்த புஷ்பிக்க

2ஆம் இடம்: அம்ரித் டி சொய்சா.

2ஆம் சுற்றில் தனிநபர் சிறந்த நிகர புள்ளிகளுக்கான ஸ்ரீலங்கா கோல்வ் யூனியன் கிண்ணம்

1ஆம் இடம்: ஏ. தனஞ்சயன்.

2ஆம் இடம்: சாலித்த புஷ்பிக்க


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்