13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு
நிறுவனங்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய
அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக வேலை தேடுபவர்களிடமிருந்து
பணியகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, தீர்வுகளை வழங்க
முன்வராத தொழில் முகவர் நிலையங்களும் பணியகத்துடன் செய்துகொண்ட
ஒப்பந்தங்களை மீறியுள்ளன.

மேலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் மற்றும் நீதிமன்றத்தைத்
தவிர்த்தல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டும் அவ்வாறான தொழில் முகவர்
நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்