
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளமை, இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விஜயம்
செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன்
நேற்று (4) சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு
பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
வி.முரளீதரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் 13ஆவது திருத்தச்
சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை குறித்து இந்திய இராஜாங்க அமைச்சரினால்
பாராட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.