12 யோசனைகளை முன்வைத்து விமல் வீரவன்ச ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம்

தேசிய சுதந்திர முன்னணின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச 12 யோசனைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த யோசனைகளை அமுலாக்கும் பட்சத்தில் நாடு சரியான பாதையில் பயணிக்கும் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அந்த யோசனைகை முன்னெடுக்கும் பட்சத்தில் தமது கட்சி ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்ரூபவ் குறித்த கடிதத்தில்,

 நாட்டில் சட்டவாட்சி கோட்பாட்டை உறுதிப்படுத்துவதுடன், மக்கள் போராட்டம் மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபித்தல் வேண்டும் .

 தற்போதை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் நீண்டகால கொள்கை திட்டத்தை வகுப்பதற்பாக சர்வக்கட்சி தலைவர் மாநாட்டை நடாத்தல்

 சர்வக்கட்சி மாநாட்டின் போராட்டத்தில் ரூடவ்டுப்படுபவர்கள்ரூபவ்துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் யோசனைகளை செயற்படுத்துவதற்கு விசேட செயற்த்திட்டத்தை வகுத்தல்.

 அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எட்டியதுடன் சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்தும் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தல்.

 சர்வக்கட்சி மாநாட்டை தொடர்ந்து சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசாங்கத்தை ஸ்தாபித்தல்.

 இணக்கப்பாடுகளை செயற்படுத்தும் வகையில் தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபித்தல்.

 நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் உண்மையை பகிரங்கப்படுத்தல்.

 பொது கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதுடன். அரச செலவுகளை கட்டுப்படுத்துவம் வகையில் அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 ஆக வரையறுத்தலுடன், அமைச்சரவை வாரத்திற்கு இருமுறை ஒன்று கூடல் அவசியமாகும்.

 அமைச்சரவை விடயதானங்கள் மற்றும் தீர்மானங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் யோசனையை பெற்றுக்கொள்ளும் வகையில் பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபித்தல். ஆகிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இடதுசாரிகளுடன் பேச்சு

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, லங்கா சமசமாயக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கம்னியூஸ் கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது, சர்வகட்சி அரசாங்கம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. எனினும், குறித்த கட்சிகளின் தலைவர்கள், விமல் வீரவன்சவினால் அனுப்பி வைக்கப்பட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைச்சாத்தியமாக்குவது தொடர்பான உறுதிப்பாடு அவசியமாகும் எனத் தெரிவித்ததோடு, சர்வகட்சி அரசாங்கம் தொடர்பிலான உத்தியோக பூர்வமான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் நிறைவுக்கு வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்