11.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர் கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் எதிர்பார்த்த படி இருக்காது. பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

மிதுனராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். பயணத்தின்போது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத் தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும்.

கடகராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மராசி அன்பர்களே!

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். சகோதரர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாராசி அன்பர்களே!

மனக் குழப்பங்கள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சகோதரர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

விருச்சிகராசி அன்பர்களே!

இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

மகரராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும்.

கும்பராசி அன்பர்களே!

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

மீனராசி அன்பர்களே!

காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்கவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

முகநூலில் நாம்