103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்ட அதிசயம்

கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் முதியோரும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் கொரோனா தொற்றிக்கொண்டால் உயிரிழக்க நேருகிறது என்றுதான் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ஈரானில் 103 வயதான ஒரு மூதாட்டியை கொரோனா வைரஸ் நோய் தாக்கியது. அவர் அதிர்ந்து போய் அப்படியே உட்கார்ந்து விடவில்லை. அங்குள்ள செம்னான் நகரில் உள்ள பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார காலம் சிகிச்சை பெற்றார். அதில் அவர் பூரண சுகம் பெற்றார். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

இதை அந்த ஆஸ்பத்திரியின் தலைவரான நாவித் தனாயி தெரிவித்தார்.

இதே போன்று ஈரானில் கெர்மான் நகரை சேர்ந்த 91 வயதான முதியவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்றியது.

அவர் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தைரியத்துடன் கொரோனா வைரஸ் நோயை சந்தித்து, 3 நாட்கள் சிகிச்சையில் மீண்டு வந்திருக்கிறார்.

முகநூலில் நாம்