10,000 இலங்கையர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்!

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் தொழில்புரிந்த இலங்கைப் பணியாளர்கள் 10,000 பேர், தமது தொழில்களை இழந்துள்ளனரென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளிலுள்ள 40,000 இலங்கையர்கள் இலங்கைக்கு வருவதற்கு விண்ணப்பித்துள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விண்ணப்பித்துள்ளவர்கசளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்