10.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சக ஊழியர்களுக்கு அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள்.

மிதுனராசி அன்பர்களே!

மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். ஆனால், மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

கடகராசி அன்பர்களே!

இன்று அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கன்னிராசி அன்பர்களே!

எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம் பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண் டாகும். சிலருக்கு பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித் தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.

துலாராசி அன்பர்களே!

வீண் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவு எடுப்பதைத் தவிர்க் கவும். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிகராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குடும்பப் பெரியவர்களை சந்தித்து , அவர்களுடைய ஆசிகளுடன் பணவரவும் கிடைக்கப்பெறும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசுராசி அன்பர்களே!

அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்மாமன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். நிர்வாகத்தினரின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கடன்கள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப் பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்க ளுக்குச் சென்று வருவீர்கள்.அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

முகநூலில் நாம்