10 விக்கெட்டுகளால் இந்திய அணி இலகு வெற்றி!

சிம்பாப்வே உடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.

ஹராரேயில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு சுருண்டது. முதல் நான்கு வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க கடைசி வரிசை வீரர்கள்தான் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் தீபக் சஹர், பிரசித் கிரிஷ்னா மற்றும் அக்சார் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலெடுத்தாட வந்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றியே 30.5 ஓவர்களில் 192 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஆரம்ப வீரர்களான ஷிகர் தவான் 113 பந்துகளில் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் ஷுப்மன் கில் 72 பந்துகளில் ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களையும் பெற்றனர்.

சிம்பாப்வே அணி 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் எவராலும் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்