1 இலட்சத்து 20 ஆயிரம் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது 

2 வது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வழங்குவதற்கு இது போதுமானது எனவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19 ஆயிரத்து 413 பேரில், 50 வீதமானோருக்கு இதுவரையில் கொவிட் வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களும் ஏற்றப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்