09.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சகோதரர் தொடர்பான முக்கிய பொறுப்பு ஒன்றை ஏற்க நேரிடும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமுகமாக நடைபெறும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

ரிஷபராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். எதிரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் – மனைவிக் கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை உற்சாகமாக நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகளால் சிலர் கடன் வாங் கவும் நேரிடும். மாலையில் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகப் பணிகளை வீட்டிலும் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமார்தான்.

கடகராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் உறவி னர்களின் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தையின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் நிர்வாகத்தினரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டும்.

கன்னிராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும், அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

விருச்சிகராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும்.

தனுசுராசி அன்பர்களே!

மனதில் சஞ்சலம் ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களும் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். தந்தையிடம் நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும்.

முகநூலில் நாம்