06.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷம்: நண்பர் மகிழ்ச்சிகரமான தகவல் தருவார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற, கூடுதல் மூலதனம் செய்விர்கள். சமூகத்தில், நல்ல மதிப்பு வளரும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

ரிஷபம்: மனதில் சஞ்சலம் உருவாகலாம். அனுபவத்தால் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற சீர்திருத்தம் தேவை. சிக்கனம் அவசியம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம் : பேச்சில் சாதுார்யம் நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். கூடுதல் வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: உறவினரின் உதவியால் பெருமை கொள்வீர்கள். மனதில் உற்சாகமும், செயல்களில் சுறுசுறுப்பும் ஏற்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வளர்ச்சி பெறும். பணவரவு அதிகரிக்கும். எதிரிகள் விலகுவர்.

சிம்மம்: சிலர் கூறும் அறிவுரை சங்கடத்தை உருவாக்கும்.தொழில், வியாபாரத்தில் உள்ள பணி தாமதமாகலாம். வரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். தாயின் அன்பான வார்த்தை நம்பிக்கைத் தரும்.

கன்னி: முக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம். தகுந்த திட்டமிடுதல் வெற்றி பெற உதவும். சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் சச்சரவு பேசக்கூடாது. பணத்தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

துலாம்: செயலில் வசீகர மாற்றம் உருவாகும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பண வருமானம் உண்டு. பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். விருந்து,விழாவில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளுக்கு விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள்.

தனுசு: தொடர்பில்லாத பணி குறுக்கீடு தரும். குடும்பத்தினரால் சிரமம் சரியாகும். தொழிலில் கூடுதல் உழைப்பு தேவை. சீரான பணவரவு கிடைக்கும். வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

மகரம் : செயல்களில் தாமதம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் பணிகளை நிதானமுடன் நிறைவேற்றுவீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை.

கும்பம் : உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

மீனம் : வீண்பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. நிலுவைப் பணியை நிறைவேற்றுவதால் பதற்றம் குறையும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

முகநூலில் நாம்