05.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷம்: முக்கியமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வளர்ச்சி பெற முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கித்தருவீர்கள்.

ரிஷபம்: உறவினர்களிடம் விரக்தியுடன் பேச வேண்டாம். தொழில்,வியாபாரத்தில் அளவான மூலதனம் தேவை. நிலுவைப்பணம் வசூலாகும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும்.

மிதுனம் : மனதில் உறுதி நிறைந்திருக்கும். எதிரியால் தொந்தரவு விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி காண கூடுதலாக பணிபுரிவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

கடகம்: அண்டை வீட்டார் அன்பு பாராட்டுவர். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

சிம்மம்: மனதில் குழப்பம் ஏற்படலாம்.அனுபவத்தை பாடமாக கருதி செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உருவாகும். செலவுக்கேற்ற பணவரவு கிடைக்கும். தாய்வழி உறவினர் பாசத்துடன் உதவுவர்.

கன்னி: சிலர் பயனற்ற வகையில் பேசுவர். சொந்தப்பணியில் அக்கறை காட்டுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட தடைகளை சரி செய்வீர்கள். சீரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் தேவை.

துலாம்: பெரியோர்களின் சொல்லுக்கு மதிப்பு தருவீர்கள். தாமதமான பணி புதிய முயற்சியால் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்: மனதில் புத்துணர்வு ஏற்படும்.குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்.வெகுநாட்களாக தேடிய பொருள் கிடைக்கும். நண்பருக்கு முடிந்த அளவில் உதவுவீர்கள்.

தனுசு: குடும்பத் தேவைகளில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும்.வரவை விட செலவு அதிகரிக்கும். உணவு கட்டுப்பாடு நல்லது. பணியாளர்கள் இனிய அணுகுமுறையால் சலுகை பெறலாம்.

மகரம் : முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்கப்படும். சிக்கனம் அவசியம். தாய்வழி உறவினரால் நன்மை உண்டு. ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

கும்பம் : இஷ்ட தெய்வ அருளால் நன்மை பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள்.

மீனம் : மனதில் சஞ்சலம் உருவாகலாம். பணி நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். தொழில்,வியாபார வளர்ச்சிக்கு நண்பரின் ஆலோசனை உதவும். சீரான பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

முகநூலில் நாம்