04.03.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாலையில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத் தில் விற்பனை அதிகரிக்கும். ஆனால், திடீர் செலவுகளும் ஏற்படும்.

ரிஷபராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும் நாள். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

மிதுனராசி அன்பர்களே!

தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒனறு நடைபெறும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை அனுகூலமாக முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சுபச் செலவாக இருக்கும் என்பது ஆறுதல் தரும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும்.

கடகராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.காரியங்களில் அனுகூலம் உண்டா கும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் சக ஊழியர் களின் பணிகளில் உதவி செய்து உற்சாகப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள்.

கன்னிராசி அன்பர்களே!

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வெளியில் செல்லும்போது கைப்பொருள்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகப் பணிகளில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்களால் சிறு சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.

துலாராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக் கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

விருச்சிகராசி அன்பர்களே!

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலர் தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடுவதால் உடல் அசதி உண்டாகும். ஆனால், அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.

தனுசுராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத் தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத் திலும் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகாரிகள் கடிந்துகொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். சிலருக்கு திடீர்ப் பயணங்களும் அத னால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

முகநூலில் நாம்