04.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, மாற்றம் செய்வீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினா் மதித்து சொந்தம் பாராட்டுவர்.

ரிஷபம்: சிறிய செயலும் கடினமாகத் தோன்றும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையைத் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரியாக இருக்கும். பணச்செலவில் சிக்கனம் தேவை. வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

மிதுனம்: செயலில் திறமை நிறைந்திருக்கும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மகிழ்வைத்தரும்.கூடுதல் வருமானம் கிடைக்கும்.விருந்து,விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும்.

கடகம்: நல்லவர்களின் நட்பு மனநிறைவைத் தரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன்,பொருள் சேரும். வாழ்வில் இனிய அனுபவம் ஏற்படும்.

சிம்மம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபார வளர்ச்சி நிறைவேறும். வரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்டால் உடல்நலம் சீராகும். தியானம் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

கன்னி: சிலரால் நெருக்குதல் தன்மை உருவாகும். செயல்களில் சீர்திருத்தம் வேண்டும். தொழில், வியாபாரம் பெருக கூடுதல் பணி புரிவீர்கள். பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். உறவினரின் ஆதரவால் நம்பிக்கை மேலோங்கும்.

துலாம்: விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்.கூடுதல் வருமானம் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்வு வரும்.

விருச்சிகம்: பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில்,வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும்.கூடுதல் பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

தனுசு: உணர்ச்சி வசப்படுகிற நிலை ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். கடின உழைப்பால் தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். பணத்தேவை அதிகரிக்கும்.பயணத்தில் மாற்றம் ஏற்படும்.

மகரம்: சிரமத்தினை பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல் நிறைவேற ஒருமுகத்தன்மை அவசியம். தொழிலில் சராசரி உற்பத்தி இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை பெறுவது நல்லது.

கும்பம்: மனதில் நம்பிக்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வளா்ச்சி ஏற்படும். நிலுவைப்பணம் வசூலாகும்.போட்டியில் வெற்றி பெற அனுகூலம் உண்டு. விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மீனம்: நிதானித்து செயல்படுவது நல்லது.தொழில், வியாபாரத்தில் வழக்கத்தை விட பணிச்சுமை அதிகரிக்கும்.சீரான அளவு பணவரவு கிடைக்கும்.பெண்கள் நகையை இரவலாக கொடுக்க வாங்க வேண்டாம்.

முகநூலில் நாம்