03.03.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக் கும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. நண்பர் களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக இருக்கும். குடும்பம் தொடர்பான முடிவு எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு எடுக்கவும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களும் ஆலோசனை கேட்டு வருவதால் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். மற்றபடி வீட்டில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்தில் அதிகாரிகள் கண்டிப்பாக இருப்பார்கள். பொறுமை அவசியம். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள்.

மிதுனராசி அன்பர்களே!

மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குடும்பத்தினருடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் பொறுமை அவசியம். வீட்டில் மராமத்துப் பணிகளின் காரணமாக அசதி ஏற்படும். உறவினர்கள் வருகையால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

கடகராசி அன்பர்களே!

இன்று அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவு களால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.. சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் நீண்டநாள் களாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கன்னிராசி அன்பர்களே!

எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, சுமுக உறவு ஏற்படும். நண்பர்களிடம் எதிர் பார்த்த காரியம் சாதகமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் கிடைக் கும்.

துலாராசி அன்பர்களே!

வீண் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெளியிடங்களுக்கு செல்லும்போது உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிகராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளி மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண் விவாதம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் உறவினர்களிடையே மதிப்பும் கௌரவமும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். மாலையில் குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

மீனராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். இளைய சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியில் செல்லவேண்டி வரும் என்பதால் சற்று அசதி உண்டாகும். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

முகநூலில் நாம்