01.01.2020 இராசி பலன்கள் 

மேஷம்: பேச்சில் நேர்மை இருக்கும். புதியவர்கள் நட்பு பாராட்டுவர். தொழில்,வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இயன்றளவில் அறப்பணி செய்வீர்கள்.

ரிஷபம்: பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும்.தொழில், வியாபாரம் வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர் சிறந்த பணிக்காக பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர் உதவுவர்.தொழில், வியாபாரத்தில் அனுகூல பலன் உண்டாகும். வரவை விட, செலவு அதிகரிக்கும்.உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பதால், மருத்துவச் செலவு தவிர்க்கலாம்.

கடகம்: நன்மை, சிரமங்களை பிறரிடம் சொல்லக்கூடாது. முயற்சியால் அன்றாட பணி நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உள்ள தடைகளை சரிசெய்வீர்கள். பணக்கடன் பெறுகின்ற நிலை உண்டு. தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

சிம்மம்: மனதில் உற்சாகம் ஏற்படும்.கடினமான பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்துவீா்கள். புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

கன்னி: புதியவரும் அன்பு பாராட்டுவர். செயல்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், கவுரவமும் கிடைக்கும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த சுப செய்தி வரும்.

துலாம்: செயல்கள் தாமதம் ஆவதால், மனம் வருந்த நேரிடலாம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற உதவும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். போக்குவரத்தில் கவனம் தேவை.மாணவர்கள் படிப்பில் அதிக பயிற்சி மேற்கொள்வர்.

விருச்சிகம்: நற்செயல்களால் பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை சிக்கன செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். சீரான ஓய்வு உடல் நலம் பெற உதவும்.வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

தனுசு : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். தாராள பண வரவு கிடைக்கும். மாமன், மைத்துனருக்கு உதவி புரிவீர்கள். மாணவர்கள் பொறுப்புணர்வுடன் படித்து பாராட்டு பெறுவர்.

மகரம்: சில நிகழ்வுகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இளமைக்கால அனுபவம் தைரியம் தரும். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை ஏற்படும். பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம் : பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வர பயண திட்டம் உருவாகும்

மீனம்: நல்ல செயல்களை சிலர் கேலி செய்வர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீா்கள். சீரான அளவில் பணவரவு பெறுவீர்கள். பயன்தராத பொருட்களை வாங்க வேண்டாம்.சீரான ஓய்வு ஆரோக்கியம் தரும்.

முகநூலில் நாம்