ஹெலிக்­கொப்டர் விசிறி தாக்­கி­யதில் தலைதுண்­டிக்­கப்­பட்டு இளைஞன் பலி

ஹெலி­கொப்டர் பின்­புற விசிறி தாக்­கி­யதால், உல்­லாசப் பய­ணி­யான ஓர் இளைஞன் தலை­துண்­டிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்த சம்­பவம் கிறீஸ் நாட்டில் இடம்­பெற்­றுள்­ளது.

பிரிட்­டனைச் சேரந்த ஜோன் பென்டொன் எனும் 21 வயது இளை­ஞரே இச்­சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­துள்ளார்.

ஜோன் பென்டொன், தனது குடும்­பத்­தி­ன­ருடன் கிறீ­ஸுக்கு சுற்­றுலா மேற்­கொண்­டி­ருந்தார்.

இவர்கள் மைகோனோஸ் எனும் சுற்­றுலா தலத்­தி­லி­ருந்து, தலை­நகர் ஏதென்­ஸுக்கு ஹெலி­கொப்­டரில் திரும்பி வந்­தனர்.

ஜோன் பென்டோன் பய­ணித்த ஹெலி­கொப்டர் தரை­யி­றங்­கி­யபின், ஜோன் பென்டோன் ஹெலி­கொப்­ட­ரி­லி­ருந்து வெளி­யேறி சிறிது நேரத்தில் ஹொலி­கொப்­டரின் பின்­புற விசிறி தாக்­கி­யதால் அவர் தலை துண்­டிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்தார்.

அவர் செல்பீ எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, ஹெலி­கொப்டர் விசிறி தாக்­கி­ய­தாக கிறீஸ் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. எனினும், இத்­த­க­வலை பென்­டோனின் நண்­பரும், சகோ­த­ரியும் நிரா­ரித்­த­தனர்.

மேற்­படி ஹெலி­கொப்­டரின் விமா­னியும் தரையில் பணி­யாற்றும் தொழில்­நுட்ப ஊழி­யர்­களும் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­பட்­டனர்.

இச்­சம்­பவம் தொடர்­பாக கிறீஸ் அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

கிறீஸ் பொலிஸ் அதி­காரி ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், ஜெக் பென்டோன், தனது செல்­போனை ஹெலி­கொப்­டரில் மறந்து வைத்­து­விட்டு வெளி­யே­றி­யதால் அதை எடுப்­ப­தற்­காக திரும்பி வந்தார் எனக் கூறப்­ப­டு­வது குறித்து விசா­ரிணை நடத்தி வரு­கிறோம் எனத் தெரி­வித்­துள்ளார்.

நாம் பலரை நேர்­காணல் செய்து வரு­கிறோம். ஆனால், ஜெக் பென்டோன், தனது கையில் செல்­போ­னுடன் இருந்­தைதை சிலர் கண்­டுள்­ளனர். எமது விசா­ர­ணைகள் முடி­வ­டைந்­து­டவன் விசா­ரணைக் கோவையை வழக்குத் தொடுநர்களுக்கு அனுப்புவோம். குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டுமா என்பதைஅவர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்