ஹெரோயின் மற்றும் 13 தொலைபேசிகளுடன் இளைஞர் யாழில் கைது

யாழில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குவில் காம்பஸ் லேன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய இளைஞரே விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின்படி கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் மற்றும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 13 தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப் படையினரால், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதா கவரும்,விசாரணையின் பின்னர், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்