ஹெரோயினுடன் யுவதிகள் மூவர் கைது

நாட்டின் சில பகுதிகளில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் ஹெரோயினுடன் யுவதியொருவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிரிந்திவெல – சரணதிஸ்ஸ மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் ஹெரோயினுடன் கிரிந்திவௌ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீகொட – தாம்பே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் காரொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 1 கிலோ 2 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரொருவர் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மீகொட மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 39 மற்றும் 26 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்