ஹிந்தி திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா!

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை  வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உலகின் அதிக சம்பளம் பெரும் நடிகைகளின் டாப் 10 வரிசையில் இடம்பிடித்துள்ளார்.  

உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் தீபிகா படுகோனே 10வது இடத்தில் உள்ளார். இவரின் சம்பளம் 10 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாய் ஆகும் . கடந்த வருடம் பாஜிராவ் மஸ்தானி, பிகு (Piku) போன்ற 100 கோடி கலெக்‌ஷன் வாங்கிய ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரை தீபிகா படுகோனே எடுத்திருந்தார். பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் இடத்தை ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் பிடித்துள்ளார், அவரின் சம்பளம் 46 மில்லியன் டாலர்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்