
ஹரியாணாவில் உள்ள பள்ளி விடுதியில் தங்கியிருந்த 54 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், இந்தாண்டு தொடக்கும் முதல் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஹரியாணாவின் கொரோனாலில் உள்ள பள்ளியின் விடுதியில் 54 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி யோகேஷ் குமார் சர்மா கூறியதாவது, ஹரியானாவின் கர்னாலில் ஒரு பள்ளி விடுதியில் தங்கியிருந்த 54 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு விரைந்து, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.