ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியில் சீனாவின் தலையீடு!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக, உலகளாவிய ரீதியில் துறைமுக நடவடிக்கையில் ஈடுபடும் முன்னணி நிறுவனமான சீனாவின் ஃபுஜியான் மாநில வர்த்தகக் குழுமம் இணைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வர்த்தகக் குழுமத்தின் 85 வீத பங்கை சீனாவின் Merchant Port Holdings நிறுவனத்திற்கு வழங்கும் பங்குப் பரிமாற்ற உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த பங்குப் பரிமாற்றக் கொடுக்கல் வாங்கலின் பெறுமதி 268 மில்லியன் அமெரிக்க டொலராகும். அதாவது 51 பில்லியன் ரூபாவாகும்.

முன்னணி ஃபுஜியான் மாநில வர்த்தகக் குழுமம் தற்போது உலகளாவிய ரீதியில் பல துறைமுகங்களின் முனைய நடவடிக்கை, எரிபொருள் களஞ்சியப்படுத்தல், பொருட்கள் போக்குவரத்து மற்றும் பொதியிடல் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பாரிய நிறுவனமாகும்.

China Merchant Port Holdings நிறுவனம், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வர்த்தகக் குழுமத்தில், 974 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளது.

China Merchant Port Holdings நிறுவனத்தின் கூட்டு நிறுவனத்தின் 23 வீத பங்குகள் ஃபுஜியான் மாநில வர்த்தகக் குழுமத்திற்கு விற்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக அந்த நிறுவனம் 268 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொண்டுள்ளது.

முகநூலில் நாம்