ஹட்டனுக்கு நிவாரணம்.

இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ள நிலையில், குறித்த உலர் உணவு பொருட்கள் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருள்கள் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட ரயில் மூலம் இன்று (02) காலை ஹட்டனை சென்றடைந்தன.

ஹட்டன் – அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தமிழக நிவாரணப் பொருட்கள் கொழும்பில் இருந்து ரயிலில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு உடனடியாகவே விநியோகம் இடம்பெற்றன.

இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 67 கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 23,350 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக அரிசி தொகைகள், இன்று காலை அம்பகமுவ பிரதேச செயலாளர் தலைமையிலான குழு ரயிலில் வந்த இந்த நிவாரண பொருட்களை பொறுப்பேற்று உடனடியாக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கிராம சேவகரின் ஊடாக லொறிகளில் மூலம் இந்த அரிசி தொகைகள் அனுப்பப்பட்டது.

மேலும், கிராம சேவகர்களின் ஊடாக கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள் எதிர்வரும் நாட்களில் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்