ஹஜ்ஜுப் புனித யாத்திரை 29ஆம் திகதி தொடங்கும்!

ஹஜ்ஜுப் புனித யாத்திரை இம்மாதம் 29ஆம் திகதி தொடங்கும் என்று சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வழக்கமாக உலகெங்குமிருந்து சுமார் இரண்டரை மில்லியன் பேர் புனித மக்காவுக்குப் பயணம் மேற்கொள்வர்.

எனினும், கொரோன வைரஸ் பரவல் சூழலில் இவ்வாண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த சுமார் 1,000 முஸ்லிம்களுக்கு மட்டுமே புனித யாத்திரைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான சுகாதார விதிமுறைகள் நடப்பிலிருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முகநூலில் நாம்