ஸ்ரீலங்கா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து! மூடப்படுகின்றன நெடுஞ்சாலைகள்

நாட்டில் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் திங்கட் கிழமை வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இச்சூழலில் அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இடைநிறுத்தப்படுகிறது.

மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டே மேற்படி ரயில் சேவையை இடைநிறுத்தியதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டின் சகல அதிவேக நெடு வீதிகள் இன்று மாலை 4 மணியுடன் மூடப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்