
இலங்கை மக்கள் நாளாந்தம் 5000 மெட்ரிக் தொன் உணவுப்பொருட்களை வீண்விரயமாக்கிவருவதாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் சிலவற்றில், உணவுப் பொருளை வீண்விரயமாக்கினால் , அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
தினமும் 9810 மெட்ரிக் தொன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவற்றில் 3667 மெட்ரிக் தொன் மட்டுமே உள்ளூர் அதிகாரிகளால் அகற்றப்படுகின்றன.
அத்துடன் ஒரே நாளில் 400 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்து வெளியேற்றப்படுகிறது, எனவே கழிவுகளை அகற்றும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்பில் சேர்க்கப்படும் திடக்கழிவுகளில் 20 முதல் 30 சதவீதம் வரை பல்வேறு வகையானவை பொதி செய்யப்பட்டவை என்று அவர் கூறினார். கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் 20,000 மெட்ரிக் தொன் இலத்திரனியல் கழிவுகள் சுற்றுச்சூழலுக்குள் கொட்டப்படுகின்றன, அவற்றில் 8,000 மெட்ரிக் தொன் மறுசுழற்சி செய்யப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.