
வதிவிடத்தை உறுதிப்படுத்த இனிமேல் கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் மாத்திரம் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரச பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
வதிவிடத்தை உறுதிபடுத்தும் ஆவணங்கள் கிராம சேவையாளரினால் வழங்கப்படும் பட்சத்தில் அதனை மீள உறுதிப்படுத்திக்கொள்ள பிரதேச செயலாளரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் மக்களுக்கு இலகுவான சேவையை வழங்கும் நோக்குடனேயே அரச பொது நிர்வாக அமைச்சினால் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
அற்கமைய வதிவிடத்தை உறுதிப்படுத்த இனிமேல் கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் மாத்திரம் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.