ஸ்ரீலங்காவில் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

போக்குவரத்து சேவை தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இயந்திர கோளாறு காணப்படும் பஸ்களை திருத்துவற்காக 3 இலட்சம் ரூபா கடன் வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களின் ஒன்றிணைந்த கால அட்டவணை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கு பின்னர் பஸ்களின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்றே பயணிகளுக்கு பயணிக்க முடியும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அரச மற்றும் தனியார் பிரிவு நிறுவனங்களை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்ற முடியுமா என்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

முகநூலில் நாம்