ஸ்ரீலங்காவில் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்ரீலங்காவில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நாளை திறக்கப்படவுள்ளது.

இதன்படி, நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம் பாடசாலை திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

பாடசாலை அதிபர், ஆசியர் மற்றும் சேவையாளர் மாத்திரம் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

எதிர்வரும் ஒரு வாரக்காலப்பகுதியில் பாடசாலைகளை சுத்தமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்கள் கட்டங்கட்டங்களாக பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

உயர்தர மாணவர்களே முதலில் பாடசாலைக்கு செல்ல உள்ளனர். மாணவர்களுக்கு முகக்கசம், கைகளை கழுவுதல், சமூக இடைவெளி போன்ற சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்