ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ள டெங்கு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 24 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 31 ஆந் திகதி வரை 193 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திவரும் நிலையில் அதன் தாக்கம் ஸ்ரீலங்காவையும் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் டெங்கு பாதிப்புக்கும் மக்கள் முகம் கொடுத்துவருகின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ள நிலையில் டெங்கு தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல் டெங்கு நுளம்பு பெருகாத வகையில் நமது சுற்றாடலை நாமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது பலரது கருத்தாக அமைந்துள்ளது.

முகநூலில் நாம்