ஸ்ரீலங்காவின் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்.

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகநூலில் நாம்