ஸ்பெர்ம் ஸ்பான்ஸர்! பிக்பாஸின் பிரபலத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! செம வைரல் – ஜாலியான ஃபன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 மூலம் மக்களின் அன்பை பெற்று பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் அவர் ஹீரோவாக நடித்த பியார் பிரேமா காதல் படம் வெளியாகி ஹிட்டானது. பின் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், தனுஷு ராசி நேயர்களே என தொடர்ந்து லவ் ஸ்டோரிகளில் நடித்து ரசிகர்கள், ரசிகைகளை அதிகம் பெற்றார்.

அடுத்ததாக அவர் தாராள பிரபு படத்தில் நடித்து வருகிறார். ஹரிஷ் வைரமுத்து இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ர் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. படக்கும் பிரம்மா போல இப்படத்தின் போஸ்டர் கலக்கலாகவும் கலர்ஃபுல்லாகவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விந்தணுக்களை தானமாக அளிப்பவரை பற்றிய கதை இது. ஹிந்தியில் ஜான் ஆபிரகாம் நடித்த விக்கி டோனர் படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்