ஸ்பெயின் நாட்டில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தங்கியிருக்கும் இடத்தின் ஒருநாள் விலை மட்டுமே இவ்வளவா?

தமிழ் சினிமாவில் புதிய ஜோடியாக வலம் வருகிறார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜுன் 9ம் திகதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. அவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொணடார்கள்.
திருமணத்தை அடுத்து இருவரும் தாய்லாந்து ஹனிமூன் சென்றாரகள், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.


அதன்பிறகு தமிழகத்தில் நடந்த Chess விளையாட்டு நிகழ்ச்சியை இயக்குவதில் படு பிஸியாக இருந்தார் விக்னேஷ் சிவன், அந்நிகழ்ச்சியை முடித்த கையோடு இப்போது இருவரும் ஸ்பெயின் சென்றுள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஐபிஜா தீவில் சுற்றுலா சென்றுள்ளனர். ஐபிஜா தீவில் உள்ள வட முனையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான Sixth Sensesல் தங்கியுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.
இந்த Sixth Senses விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் 45,000 ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்