
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழமையாகும்.
அந்த வகையில், நடிகை சமந்தா பிரதமர் மோடி குறித்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளன.
அதில், “நான் மோடி ஜியின் ஆதரவாளர். அவரது செயற்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
மற்றோரு வீடியோவில், “நான் மோடியின் ஆதரவாளர். அவர் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வார் என நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.